
லண்டன் – ஆகஸ்ட்-28 – Lanznate என்ற பிரிட்டிஷ் சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனத்தின் சின்னம் விநாயகர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உயர் ரக வாகனங்களின் சேவை, மறுசீரமைப்பு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட மேம்பாட்டில் நிபுணத்துவம் பெற்றது இந்த Lanznate.
பெரும்பாலும் Mclaren கார்களை உருவாக்குதல் மற்றும் மீட்டெடுப்பதில் இது புகழ்பெற்றது.
இந்நிலையில், விநாயகர் சிலையை அது ஏன் அதன் சின்னமாகப் பயன்படுத்துகிறது என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?
உண்மையில் உலகப் புகழ்பெற்ற ஆங்கில rock இசைக்குழுவான Beatles-சுக்கும் இந்த விநாயகர் சிலை சின்னத்தில் தொடர்புள்ளது.
விநாயகர் செழிப்பின் கடவுள் மற்றும் தடைகளை நீக்குபவர் என்பதால், Beatles-சின் கீத்தார் கலைஞர் George Harrison தான், விநாயகர் பெயரை சின்னமாகப் பயன்படுத்த Lanznate-விடம் பரிந்துரைத்தாராம்.
இந்நிலையில் அண்மைய விநாயகர் சதுர்த்திக்கு Lanznate வாழ்த்துத் தெரிவித்த போதே பலருக்கு இது குறித்து தெரிய வந்தது.
அமர்ந்த நிலையில் 4 கரங்களைக் கொண்ட விநாயகப் பெருமானா அந்த சின்னம் காட்சியளிக்கிறது.
என்றாலும், சிலர், விநாயகர் கோபத்திலிருப்பது போல் அச்சின்னம் உள்ளதாக கருத்துப் பதிவிட்டுள்ளனர்.