Latestமலேசியா

விபத்தில் கார் பூட்டில் சென்று ‘சொருகிய’ காளை மாடு; லங்காவியில் சம்பவம்

லங்காவி, மார்ச்-22 – கெடா, லங்காவியில் புரோட்டோன் வீரா ஏரோபேக் காரால் மோதப்பட்ட காளை மாடு தூக்கி வீசப்பட்டு, அதே காரின் பூட் பகுதியில் சென்று சொருகிய சம்பவம் வைரலாகியுள்ளது.

நேற்று அதிகாலை 1 மணிக்கு, 26 வயது இளைஞர் Jalan Ulu Melaka-விலிருந்து Jalan Ayer Hangat செல்லும் வழியில் அவ்விபத்து நேர்ந்தது.

சம்பவ இடத்தை நெருங்கும் சமயத்தில் திடீரென மாடுகள் கூட்டமாக சாலையைக் கடந்திருக்கின்றன.

இதனால் மாடுகளைக் கார் மோதுவதை அவரால் தவிர்க்க முடியவில்லை.

அதில் ஒரு காளை மாடு தூக்கி வீசப்பட்டு, நொறுங்கியிருந்த பின்பக்கக் கண்ணாடியின் வழியாக காரின் பூட்டில் விழுந்து சொருகிக் கொண்டது.

மாடுகளை மோதியதில் காரின் முன்பக்கமும் நொறுங்கி, கூரை மடங்கி, கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கின.

எனினும் காரோட்டுநருக்கு அதில் காயமேதும் ஏற்படவில்லை.

மாட்டுக்கு என்ன ஆனது என்பது குறித்து தகவல் இல்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!