
பாலிங், அக்டோபர்-7,
கெடா, பாலிங்கில் தான் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதில், 28 வயது பெண் 3 மீட்டர் ஆழமுள்ள கால்வாயில் விழுந்தார்.
நேற்று மாலை அவர் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து தீயணைப்பு – மீட்புப் படையினர் சம்பவ இடம் விரையும் வரையில், அப்பெண் கால்வாயிலேயே கிடந்தார்.
நில மேற்பரப்பு ஈரப்பதமாகவும் வழுக்கலாகவும் இருந்ததால், மேற்கொண்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்க, தீயணைப்பு வீரர்கள் சற்று கவனமாகவே மீட்புப் பணியை மேற்கொண்டனர்.
இதனால் அப்பெண்ணை மேலே கொண்டு வர சுமார் அரைமணி நேரம் பிடித்தது.
பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.