Latestமலேசியா

விமர்சகர்களை அச்சுறுத்துவதை நிறுத்துங்கள்; சுதந்திரத்தை காக்க அரசாங்கம் முன்வர வேண்டுமென DAPSY வலியுறுத்து

கோலாலாம்பூர், டிசம்பர்-4 – அரசியல் கேலிச் சித்திர ஒவியரான Fahmi Reza மீது போலீஸ் நடத்திய விசாரணையை DAP இளைஞர் பிரிவான DAPSY-யின் தேசியத் தலைவர் Woo Kah Leong கடுமையாக கண்டித்துள்ளார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் படத்தை எலி வடிவில் காட்டிய வீடியோவுக்காக விசாரணை நடத்துவது, ஜனநாயகக் கொள்கைக்கு எதிரானது என்றார் அவர்.

“விமர்சகர்களை அச்சுறுத்துவதை நிறுத்துங்கள்; மக்கள் கவனித்து வருகின்றனர்” என Ka Leong எச்சரித்தார்.

நடப்பு அரசாங்கம், முந்தைய ஆட்சியைப் போல விமர்சகர்களை அடக்காமல், மடானி கொள்கையின் அடிப்படையில் கருத்து சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என Kah Leong வலியுறுத்தினார்.

அண்மைய சபா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளே, மக்கள் தான் தீர்மானிக்கும் சக்தி என்பதை நிரூபித்ததாக சுட்டிக் காட்டிய அவர், அரசாங்கத்தின் நற்பெயர் பாதிக்கப்படாதிருக்க, போலீஸ் மற்றும் பிற அமைப்புகள் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் Kah Leong கேட்டுக் கொண்டார்.

முன்னதாக பிற்பகல் 2 மணிக்கு போலீஸாரிம் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டிருப்பதாக Fahmi, தனக்கே உரிய கிண்டலுடன் ஃபேஸ்புக்கில் பதிவுச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!