Latestமலேசியா

விமானப் பயணத்திலிருந்து உடற்பயிற்சிக்கு: ஆசிய பசிஃபிக் சமூகங்களை இணைக்கும் AirAsia & HYROX பங்காளித்துவம்

செப்பாங், ஜனவரி-25 – nநாட்டின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான AirAsia, உலகளாவிய உடற்பயிற்சி போட்டித் தொடரான HYROX-சுடன் புதியப் பங்காளித்துவத்தை அறிவித்துள்ளது.

இந்த ஒத்துழைப்பு, ஆசிய பசிஃபிக் வட்டாரத்தில் உள்ள உடற்பயிற்சி சமூகங்களை ஒன்றிணைத்து, ‘பயனுள்ள பயணம்’ என்ற கருத்தை முன்னெடுக்கிறது.

போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்கள், எல்லைகளைத் தாண்டி பயணம் செய்து, உடற்பயிற்சி மற்றும் சமூக இணைப்பை அனுபவிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

HYROX, இப்போது ஆசியாவில் தனது தடத்தை விரிவாக்குகிறது.

இந்த சந்தர்ப்பத்தில், இதற்கான பயண வசதிகளை AirAsia மலிவான விலையில் வழங்குகிறது.

குறிப்பாக இவ்வாண்டு AirAsia நடத்தும் HYROX போட்டிகளில் பதிவு செய்யும் அனைத்து பங்கேற்பாளர்களும், HYROX மூலமான ஆரம்ப பதிவு காலத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு விமான பயணங்களில் 10% சிறப்புக் கழிவுச் சலுகையைப் பெறுவார்கள்.

இதனால் அவர்கள் போட்டியில் முழு கவனம் செலுத்தி, அனுபவத்தை முழுமையாக இரசிக்க எளிதாகும் என, AirAsia தலைமை வணிக செயலதிகாரி Amanda Woo கூறினார்.

உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மற்றும் சுற்றுலாவை ஒருங்கிணைக்கும் இம்முயற்சி, AirAsia-வை வெறும் விமான சேவையாக அல்லாமல், சமூகங்களை இணைக்கும் சக்தியாக நிலைநிறுத்துகிறது.

இவ்வாண்டு இந்தோனேசியா, ஜகார்த்தாவில் ஜூன் 6–7-ஆம் தேதிகளிலும், கோலாலம்பூரில் டிசம்பரிலும் இரு முக்கிய HYROX போட்டிகளின் முதன்மை ஆதவாளராகவும் AirAsia விளங்குகிறது.

இப்புதிய நகரங்கள் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்களை வரவேற்று, போட்டி வார இறுதிகளை உடற்பயிற்சி சார்ந்த பயண அனுபவங்களாக மாற்றவிருக்கின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!