
கெந்திங், ஜூலை-11 – கெந்திங் மலை SkyAvenue பேரங்காடியில் நேற்று சில ஆடவர்களுக்குள் சண்டை மூண்டதை, Resort World Genting நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
எனவே தேவையற்ற யூகங்களை பொது மக்கள் எழுப்ப வேண்டாமென அது கேட்டுக் கொண்டது.
அச்சம்பவத்தைக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய அந்நிறுவனம், போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கவும் உறுதியளித்தது.
அங்கு இரு ஆடவர் கும்பல்களுக்கு இடையில் மூண்ட சண்டை வீடியோவில் இணையத்தில் முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.
அதில், சிறார்கள் விளையாடும் பகுதி அருகே அவ்வாடவர்கள் இரும்புகளைத் தூக்கி ஒருவரை ஒருவர் அடிக்கப் பாய்வதும், துரத்தி ஓடுவதையும் காண முடிந்தது.