Latestமலேசியா

வீடில்லாமல் காரில் தங்கிய செமோர் இந்தியத் தம்பதிக்கு Yayasan Kebajikan நேரில் உதவி

செமோர், ஆகஸ்ட்-5 – பேராக், செமோரில் (Chemor) வீடற்ற நிலையில் 2 வாரங்களாக காரில் தங்கியிருந்த ஓர் இந்தியத் தம்பதி குறித்து வணக்கம் மலேசியா வெளியிட்ட செய்தி வைரலான நிலையில், உடனடியாக அது தம்புன் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் கவனத்தைப் பெற்று அதன் இந்திய அதிகாரி சுரேஷ் குமார் தற்காலிக தங்குமிடத்தையும் இதர உதவிகளையும் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, இவ்விவகாரம், மகளிர் குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் நேன்சி சுக்ரியின் கவனத்திற்கு சென்று, அவரது அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக நல வாரியமான Yayasan Kebajikan Negara அத்தம்பதியருக்கு உதவும் முயற்சியில் இறங்க வணக்கம் மலேசியாவை தொடர்புக் கொண்டது.

அதனைத் தொடர்ந்து, சுரேஸ் குமாரின் பராமரிப்பில் தற்காலிகமாக அத்தம்பதியர் தங்க வைக்கப்பட்டுள்ள கோவிலுக்குச் சென்ற தேசிய சமூக நல வாரியம் உணவுக் கூடைகள் உள்ளிட்ட உதவிகளை வழங்கியது.

இதனிடையே, அத்தம்பதியரின் பிரச்சனையை கேட்டறிந்த தேசிய சமூக நல வாரியத்தினர், அவர்கள் பெற்று வரும் மாதாந்திர கருணைத் தொகையை அதிகரிக்க உறுதியளித்துள்ளனர்.

அதே சமயத்தில், அவர்களுக்கான நிரந்தர தங்குமிடமும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளியான 55 வயது செல்வம் முனியாண்டி, அவரின் 56 வயது மனைவி லக்ஷ்மி நாராயணன் இருவரும், 2 வாரங்களாக Chemor Park, Taman Emas அருகே காருக்குள்ளேயே தங்கி, வருவோர் போவோரின் உதவியில் நாட்களைக் கடத்தி வருவதாக வணக்கம் மலேசியா முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!