வெறும் 24 மணி நேரங்களில் நெடுஞ்சாலை நிர்மாணிப்பு; சாலைக் கட்டுமானத்தில் இந்தியா 2 கின்னஸ் சாதனைகள்

விஜயவாடா, ஜனவரி-10,
பெங்களூரு–கடப்பா–விஜயவாடா வழித்தடங்களுக்கான நெடுஞ்சாலை நிர்மாணிப்பு வாயிலாக, சாலைக் கட்டுமானத்தில் இந்தியா கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், வெறும் 24 மணி நேரங்களில் 2 கின்னஸ் சாதனைகளைப் பதிவுச் செய்துள்ளது.
ஒரே நாளில் 28.95 கிலோ மீட்டர் சாலை அமைக்கப்பட்டது, 10,675 மெட்ரிக் டன் காங்கிரீட் தார் இடைவிடாமல் பயன்படுத்தப்பட்டது ஆகியவையே அந்த உலகச் சாதனைகளாகும்.
சுற்றுச்சூழல் தோழமை முயற்சியாக, விவசாய கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட தார் பயன்படுத்தப்பட்டிருப்பது, இதில் சிறப்பம்சமாகும்.
இச்சாதனை ஆந்திரப் பிரதேசத்தில் நிகழ்ந்தது.
இது இந்தியா குறிப்பாக ஆந்திர பிரதேச வரலாற்றில் ஒரு மைல் கல் என முதல்வர் சந்திரபாபு நாயுடு பெருமிதம் தெரிவித்தார்.
மொத்தம் 343 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த நெடுஞ்சாலை முழுமைப் பெற்றதும், அமராவதி–பெங்களூரு இடையிலான பயணத்தை வெறும் 6 மணி நேரங்களாக சுருக்கி விடும்.



