
ஷா ஆலாம், ஜூலை-18- Rapid KL On-Demand வேன் சேவை, இன்று முதல் ஷா ஆலாம் மற்றும் கிள்ளானுக்கு விரிவுப்படுத்தப்படுகிறது.
Persiaran Dato Menteri முதல் KTM Shah Alam வரை; KTM Padang Jawa தொடங்கி Terminal 17 வரை; KTM Padang Jawa முதல் Seksyen 7 வரை; U12 Cahaya Alam; Bandar Baru Klang; KTM Klang தொடங்கி Batu Belah உள்ளிட்ட 12 புதியப் பகுதிகளை இச்சேவை உட்படுத்தியிருக்கும்.
Taman Summit; கிள்ளான் KTM முதல் – Teluk Gadong வரை; Sri Andalas; Klang Jaya; Bandar Bukit Tinggi; Bandar Puteri ஆகிய இடங்களிலும் இப்புதிய வேன் சேவை கிடைக்கும் என, Rapid Bus நிறுவனம் அறிக்கையொன்றில் கூறியது.
நகரப் போக்குவரத்து வசதிகள் குறிப்பாக மக்களுக்கான பொது போக்குவரத்து வசதிகள் மேலும் எளிதாகவும் விரைவாகவும் கிடைப்பதை உறுதிச் செய்யும் வகையில் இச்சேவை விரிவாக்கம் அமைவதாக அது கூறிற்று.
இருக்கைகளுக்கான உத்தரவாதத்தைத் தரும் Rapid KL On-Demand வேன் சேவைக்கு, தினமும் காலை 6 மணி தொடக்கம் இரவு 11.30 மணி வரை முன்பதிவு செய்யலாம்.
மேலும் ஏராளமானோர் அச்சேவையைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக, வெறும் 1 ரிங்கிட் கட்டணத்திலான கழிவுச் சலுகை தொடர்ந்து வழங்கப்படுகிறது.
Google Play Store அல்லது Apple App Store -ரில் Rapid KL On-Demand செயலியை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து, உங்கள் பயணத்திக்கு நீங்கள் முன்பதிவு செய்யலாம்.