வெறும் RM120 ‘tatu’ கடனுக்காக, ஷா அலாமில் பெரும் சண்டை; நால்வர் கைது

ஷா ஆலாம், நவம்பர் 11 – நேற்று இரவு, செத்தியா அலாம் பகுதியிலிருக்கும் குடியிருப்பு பகுதி ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில், வெறும் 120 ரிங்கிட் மதிப்பிலான டாட்டூ (tatu) கடனை காரணமாகக் கொண்டு ஏற்பட்ட சண்டையில், ஒருவர் ஆவேசமடைந்து மற்றொருவரின் காரை சேதப்படுத்திய சம்பவம் அக்குடியிருப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்கலவரத்தின்போது அடிதடி சண்டையில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் மின்வெடி துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் Eksoz எக்ஸாஸ்ட் குழாய் போன்ற ஆயுதங்களையும் பயன்படுத்தினர் என்று ஷா ஆலாம் மாவட்ட காவல் துறை தலைவர், முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காணொளியில், சம்பந்தப்பட்ட வாகனத்தை தவிர மற்ற சில வாகனங்களும் சேதமடைந்திருப்பதைத் தெளிவாக காண முடிந்தது.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சபா மாநிலத்தைச் சேர்ந்த 26 முதல் 28 வயதுடைய நால்வரை கைது செய்து, சம்பந்தப்பட்ட வாகனம் மற்றும் ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கு குற்றச் சட்டம் மற்றும் அபாயகரமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.



