
பாசீர் மாஸ், டிச 2 – எஸ் .பி.எம் (SPM) தேர்வை பருவ மழைக்காலம் இல்லாத காலக்கட்டத்தில் நடத்துவதற்கான பரிந்துரையை கல்வி அமைச்சு பரிசீலித்து வருகிறது. இந்த விவகாரம் அவ்வப்போது விவாதிக்கப்பட்டு, ஆராயப்படும் என கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் ( Fadhlina Sidek) தெரிவித்தார். எங்களுக்கு கிடைத்த ஆலோசனையில் இதுவும் ஒன்றாக இருப்பதால் இதனை நாங்கள் பரிசீலிப்போம். தற்போது SPM அட்டவணை ஆண்டின் இறுதியில் இருப்பதால் வெள்ளத்தை எதிர்கொள்கிறோம் என அவர் கூறினார்.
இந்த விவகாரத்தை நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு அவ்வப்போது அதனை தீவிரமாக ஆராய்வோம். மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இது பார்க்கப்படுவதாக பாசிர் மாஸ் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு இன்று வருகை புரிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது பட்லினா இத்தகவலை வெளியிட்டார்.