Latestஉலகம்

மின் படிக்கட்டுகள் நின்றுவிட்டன, டெலிப்ராம்ப்டர்கள் பழுதடைகின்றன; ஐ.நாவை கிண்டல் செய்த டிரம்ப்

நியூயார்க் ,செப் 24 – நியூயார்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்திற்கு நேற்று வருகை புரிந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) , தனது துணைவியார் மெலனியா டிரம்புடன் (Melania Trump) பயணித்தபோது மின் படிக்கட்டுகள் திடீரென நின்றது மற்றும் அவர் உரையாற்றியபோது teleprompterரிலும் சிக்கல் ஏற்பட்டதால் நிலைமை மேலும் மோசமடைந்தது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஐ.நாவை கிண்டல் அடித்தார்.

இந்த teleprompterரை யார் இயக்கினாலும், நீங்கள் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள் என்று அவர் கூறினார்.

பின்னர் அந்த இரண்டு சம்பவங்களையும் ஐ.நா.வின் பல தோல்விகள் என்று விவரித்தவற்றுடன் தொடர்புப்படுத்தினார், இதில் தொடர்ச்சியான மோதல்களில் அதன் அமைதி முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்காததும் அடங்கும்.

தாம் ஏழு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் , அதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட தலைவர்களையும் கையாண்டதாகவும் ஆனால் , ஐ.நா.விடமிருந்து ஒருபோதும் தொலைபேசி அழைப்பு வரவில்லை என்று டிரம்ப் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

முதல் பெண்மணி உடல்நிலை சரியில்லாமல் இருந்திருந்தால், அவர் கீழே விழுந்திருப்பார்.

ஐ.நா.விடமிருந்து தனக்குக் கிடைத்த இரண்டு விஷயங்களில் ஒன்று மோசமான eskalator மற்றும் ஒரு உடைந்த teleprompter என்று டிரம்ப் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து , டிரம்பை சங்கடப்படுத்த eskalator வேண்டுமென்றே நிறுத்தப்பட்டதா என்பதைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஐ.நா.வும் அதன் ஊழியர்களும் வேண்டுமென்றே அதிபர் டிரம்ப் மற்றும் அவரது துணைவியாரை சங்கடப்படுத்த முயன்றதாக கண்டறியப்பட்டால் , அதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் ( Karoline Leavitt) கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!