
கோலாலம்பூர், அக்டோபர் 7 –
வேப் மற்றும் மின்சிகரெட் காரணமாக ஏற்பட்ட நுரையீரல் நோய்களின் (EVALI) சிகிச்சைக்கு அரசு இதுவரை 244.8 மில்லியன் ரிங்கிட் செலவிட்டதாக சுகாதார துணை அமைச்சர் டத்தோ லுகனிஸ்மான் அவாங் சௌனி (Datuk Lukanisman Awang Sauni) தெரிவித்தார்.
இந்நிலை தொடர்ந்தால், 2030ஆம் ஆண்டுக்குள் இதன் செலவு 300 மில்லியன் முதல் 400 மில்லியன் ரிங்கிட்டைக் வரை உயரக்கூடும் என்பதால் வேப்புடன் தொடர்புடைய நோய்களைத் தடுக்கும் வகையில் முழுமையான தடைச் சட்டத்திற்கான அமைச்சரவை ஒப்புதலை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
மின்-சிகரெட்டுகளுக்கு முழுமையான தடை அமல்படுத்தப்பட்டால் கடத்தல் ஆபத்து மற்றும் கறுப்புச் சந்தை போன்றவை உருவாகக்கூடும் என்ற கருத்திற்கு வேப் தடை படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் அதில் சட்ட அமலாக்கம், விழிப்புணர்வு கல்வி மற்றும் சமூக பங்கேற்பு முக்கிய கூறுகளாக இருக்கும் என்றும் துணை அமைச்சர் தெளிவுப்படுத்தினார்..
பொது சுகாதாரத்திற்கான புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டம் கடந்த அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மக்கள் பங்கும் அவசியம் இந்நேரத்தில் மிக அவசியம் என வலியுறுத்தப்பட்டது..
வேப்பால் ஏற்படும் EVALI நோயின் அறிகுறிகளில் இருமல், சுவாசக் குறைபாடு, காய்ச்சல் மற்றும் மார்வலி ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது