தைப்பிங், செப்டம்பர்-19 – இல்லாத ஒரு வேலை இருப்பதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதன் பேரில், 7 மாத கர்ப்பிணி உள்ளிட்ட 11 பேர் இன்று தைப்பிங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
எனினும், 7 ஆடவர்கள் உட்பட அந்த 11 பேரும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினர்.
22 வயது கர்ப்பிணியும் இதர 10 பேரும் ஆகஸ்ட் 14-காம் தேதி லாருட், மாத்தாங், செலாமா ஆகிய மாவட்டங்களில் அக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 6 மாதங்கள் சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாட்டவர்களைக் குறி வைத்து இணையம் வாயிலாக வேலை வாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட அக்கும்பல், ஆகஸ்ட் 16-ஆம் தேதி கைதானது குறிப்பிடத்தக்கது.