
புக்கிட் ஜாலில், மார்ச்-4 – இந்துக்களின் மனதைக் காயப்படுத்தும் அளவுக்கு வீடியோ வெளியிட்டதற்காக, ஆஸ்ட்ரோ கீழ் இயங்கும் ஏரா மலாய் வானொலி அறிவிப்பாளர்கள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
3 Pagi ERA நிகழ்ச்சியின் அறிவிப்பாளர்களான Nabil Ahmad, Azad Jazmin, Radin மூவரும் தங்களின் தவற்றை ஒப்புக் கொண்டு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இந்துக்களை இழிவுப் படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என தெளிவுப்படுத்தியவர்கள், அது தெரியாமல் நடந்து விட்ட தவறு எனக் கூறினர்.
என்றாலும் அப்படி செய்திருக்கக் கூடாது என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இனியொரு முறை இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் அம்மூவரும் கைக்கூப்பி மன்னிப்புக் கோரினர்.
காவடியாட்டத்தின் போது உச்சரிக்கப்படும் ‘வேல் வேல்’ சுலோகத்தை இழிவுப்படுத்தும் வகையில் நடனமாடி அவர்கள் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து, இந்த மன்னிப்பு வீடியோ வெளியாகியுள்ளனது.
ஏரா மீது உரிய நடவடிக்கை எடுக்க மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC-யை தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் உத்தரவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.