Latestஉலகம்

யுக்ரேனிய அதிபரின் பிடிவாதத்தால் ‘கடுப்பான’ டோனல்ட் டிரம்ப்; வெள்ளை மாளிகையில் பரபரப்பு

வாஷிங்டன், மார்ச்-1 – யுக்ரேய்ன் அதிபர் Volodymyr Zelensky-யின் பிடிவாதத்தால் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கோபத்தில் கத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், வெள்ளை மாளிகையில் நேற்று அமெரிக்க – யுக்ரேய்ன் இரு வழி பேச்சாக அமைந்திருக்க வேண்டிய நிகழ்வு, பாதியிலேயே நின்றது.

Zelensky-யும் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

டிரம்ப் மற்றும் துணை அதிபர் JD Vance இருவருடனான சந்திப்பில், ரஷ்யாவுடன் சமரசம் இல்லை என்ற நிலைப்பாட்டில் Zelensky உறுதியாக இருந்ததே பிரச்னைக்குக் காரணம்.

Zelensky இறங்கி வர மறுத்ததால் சினமடைந்த JD Vance, ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து ‘நீங்கள் நன்றி கெட்டவர்’ என கத்தினார்.

ரஷ்யாவுடனான மோதலில் மூன்றாண்டுகளாக யுக்ரேய்னுக்கு அமெரிக்கா ஆதரவளித்துள்ளது; அமெரிக்கா மட்டும் இல்லையென்றால் ரஷ்யாவின் தாக்குதலில் யுக்ரேய்ன் என்றோ சிதைந்துபோயிருக்கும் என Vance கடிந்துகொண்டார்.

முகம் இறுகிப் போயிருந்த டரம்போ, பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் இடத்தில் Zelensky இல்லையென குரலை உயர்த்தினார்.

“இறங்கி வந்தால் உங்களுக்கு நல்லது; இல்லையென்றால் நாங்கள் விலகிக் கொள்கிறோம், நீங்களே தனியாகப் போராடிக் கொள்ளுங்கள்” என டிரம்ப் திட்டவட்டமாகக் கூறினார்.

இதையடுத்து சந்திப்பு பாதியிலேயே முடிந்து, வந்த வேலை முடியாமல் Zelensky விரக்தியுடன் வெளியேறினார்.

கையெழுத்து ஒப்பந்தம், கூட்டு செய்தியாளர் சந்திப்பு என அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டது.

பின்னர் சமூக ஊடகப் பதிவில், “அமைதி உடன்பாட்டுக்கு எப்போது Zelensky தயாராக இருக்கிறாரோ, அப்போது திரும்பி வரலாம்” என பதிவிட்டார்.

ரஷ்யாவுடனான மோதலில் அமெரிக்கா தன் பக்கமிருப்பதாக Zelensky நம்பிக்கொண்டிருந்த நிலையில், டிரம்ப் தற்போது ரஷ்யாவுக்கு ஆதரவாக நிற்பதால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!