
சுங்காய், ஜனவரி-19-பேராக் செமோரில் வைரலான வீடியோவில் தோன்றிய மலாயாப் புலி உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான PERHILITAN அதிகாரிகள் ஆய்வின்போது கண்டுபிடித்த அப்புலி, தற்போது சுங்காய் தேசிய வனவிலங்கு சரணாலயத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.
பரிசோதனையில் புலியின் உடல்நிலையில் பிரச்னைகள் இருப்பது உறுதிச் செய்யப்பட்டதாகவும், தேவையான சிகிச்சை மற்றும் கண்காணிப்பு சீராக நடைபெறுவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
ஏற்கனவே, மலாயாப் புலியினம் அழிந்து வரும் ஆபத்தில் இருக்கும் நிலையில், இச்சம்பவம், வனவிலங்குகளை பாதுகாப்பதில் விரைவான நடவடிக்கையின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.



