
கோலாலம்பூர், மே 8 – வேப் எனப்படும் மின் சிகரெட்டை மாறி மாறி புகைக்கும் வைரல் வீடியோவில் காணப்பட்ட மாணவர்கள் குழுவை தண்டிக்கப்போவதாக சிலாங்கூரில் உள்ள பள்ளி ஒன்று உறுதியளித்துள்ளது.
பள்ளிக்கு அடுத்துள்ள Surau எனப்படும் தொழுமை மையத்தின் வளாகத்தில் மாணவர்கள் மின் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டதாக Darul Ehsan இடைநிலைப் பள்ளி தெரிவித்துள்ளது.
Surau ஒரு புனித வழிபாட்டுத் தலம், அது அனைவராலும் மதிக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள் வழிபாட்டுத் தலத்தின் புனிதத்தை பாதிப்பதோடு மட்டுமின்றி , பள்ளியின் விதிகள் மற்றும் தொடர்புடைய சட்டங்களையும் மீறுகின்றன.
எனவே நடப்பு வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக பொருத்தமான கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த பள்ளி தனது முகநூலில் பதிவிட்டது