Latestமலேசியா

ஷாருல் இக்ராம், மலேசியாவின் புதிய அமெரிக்க தூதராக நியமனம்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 3 – அமெரிக்காவிற்கான புதிய மலேசிய தூதராக முன்னாள் வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஷாருல் இக்ராம் யாகோப் (Shahrul Ikram Yaakob) நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் மலேசிய தூதர் நஸ்ரி அஜீஸ், கடந்த பிப்ரவரி மாதம், வாஷிங்டனில் தனது 2 ஆண்டு பதவிக்காலத்தை முடித்ததிலிருந்து 4 மாதங்களுக்கும் மேலாக இந்தப் பதவி காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிமிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்ற ஷாருல், கடந்த 34 ஆண்டுகள் இப்பதவியில் அனுபவம் வாய்ந்தவர் என்றும் பலதரப்பட்ட முக்கிய அரசியல் பதவிகளையும் வகித்துள்ளார்.

1990களில் வாஷிங்டனிலுள்ள மலேசிய தூதரகத்தில் முதல் செயலாளராகப் பணியாற்றிய அவர், 2017 முதல் 2018ஆம் ஆண்டு வரை நியூயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின், நிரந்தரப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!