
ஷா அலாம் , ஏப் 8 – ஷா ஆலம், செக்சன் 8, பெர்சியாரான் கயாங்கான் T-சந்திப்பில் நிர்வாணமாக ஓடிய 18 வயது இளைஞன் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
இன்று காலை சுமார் 8.30 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து ஷா அலாம் செக்சன் 6 போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் அந்த இளைஞனை கைது செய்ததாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி முகமட் இக்பால் இப்ராஹிம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
ஷா அலாம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் அந்த இளைஞன் அணிந்துகொள்வதற்கு போலீசார் உடை வழங்கினர்.
சம்பந்தப்பட்ட அந்த நபர் தனது மாமாவின் தொலைபேசி எண்களை எழுதி காட்டியதை தொடர்ந்து அவருடன் போலீசார் தொடர்பு கொண்டனர். அந்த இளைஞன் மனநலப் பிரச்னைகளை அனுபவித்து வந்தததோடு , முன்பு பினாங்கில் உள்ள செபராங் ஜெயா மருத்துவமனையில் மனநல சிகிச்சையை பெற்று வந்ததாக இக்பால் தெரிவித்தார்.
பின்னர் ஷா அலாம் மருத்துவமனையில் பராமரிப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக அந்த இளைஞன் செக்சன் 9 இல் உள்ள தனது மாமாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.