
ஷா ஆலாம், ஏப்ரல்-25- சிலாங்கூர் ஷா ஆலாமில் பிச்சையெடுக்கும் இடம் தொடர்பான தகராற்றில், ஒரு பிச்சைக்காரர் இன்னொரு பிச்சைக்காரரைக் கத்தியால் குத்திக் கொன்றார்.
செக்ஷன் 18-ல் வங்கியொன்றின் முன்புறம் நேற்று காலை அச்சம்பவம் நிகழ்ந்தது.
புதிதாக வந்தவர் திடீரென ‘தனது இடத்தை’ அபகரித்து கொண்டதால் ஆத்திரமுற்ற 40 வயது பிச்சைக்காரர், அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது சந்தேக நபர் கையில் வைத்திருந்த கத்தியால், பாதிக்கப்பட்டவரின் நெஞ்சில் சரமாரியாகக் குத்தியது விசாரணையில் கண்டறியப்பட்டது.
கத்திக் குத்து பட்டவர் சரிந்து விழுந்து உயிரிழந்ததாக, ஷா ஆலாம் போலீஸ் லைவர் ACP மொஹமட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.
இதையடுத்து நேற்று மதியமே 28 வயது சந்தேக நபர் கைதானார்.
அவர் ஏற்கனவே 9 குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.