Latestமலேசியா

ஷா ஆலாம் I -City அருகே ஒரு பாலத்தில் பலவீனமான நிலையில் காணப்பட்ட கழுகு; காப்பாற்றிய பெர்ஹிலித்தான்

ஷா அலாம், ஜன 25 – ஷா அலாம் (Shah Alam) I -City வர்த்தக மையத்திற்கு அருகே ஒரு பாலத்தில் பலவீனமான நிலையில் இருந்த கழுகு சிலாங்கூர் வன விலங்கு பூங்கா துறை அதிகாரிகளால் காப்பாற்றியது.

பறந்து கொண்டிருந்த வழியிலிருந்து திசை மாறி வந்துவிட்டதால் அந்த கழுகு மிகவும் பலவீனமான நிலையில் காணப்பட்டதாக சிலங்கூர் Perhilitan இயக்குனர் Wan Mohd Adib Wan Mohd Yusoh தெரிவித்தார்.

நேற்று காலை 11 மணியளவில் பாலத்தின் மேலே அந்த கழுகு காணப்பட்டதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து PERHILITAN குழுவினர் அங்கு விரைந்து அதனைப் பிடித்தனர்.

காப்பாற்றப்பட்ட அந்த கழுகு சிகிச்சைக்காக பறவைகள் காப்பக மையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.

அந்த வகை கழுகுகள் பெரும்பாலும் Himalaya மலைப்பகுதி மற்றும் தீபெத்திலுள்ள ( Tibet) உயர்ந்த மலைப்பகுதிகளில் இருக்ககூடியவை என Wan Mohd Adib தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!