
ஜோகூர் பாரு, பிப்ரவரி-24 – ஜோகூர் ஸ்கூடாய் நோக்கி பயணமான காரொன்று நேற்று அதிகாலை 5 மணிக்கு PLUS நெடுஞ்சாலையில் தீப்பற்றியதில், அதன் ஓட்டுநர் உடல் கருகி மாண்டார்.
அந்நெடுஞ்சாலையின் வலப்பக்கப் பாதையில் சென்றுகொண்டிருந்த அந்த Honda City கார், 5.5-ஆவது கிலோ மீட்டரில் தீப்பிடித்தது.
உடனடியாகக் காரை, சாலைத் தடுப்பு இரும்போரமாக ஓட்டுநர் நிறுத்தினார்.
ஆனால் கதவைத் திறந்து வெளியேற முடியாததால் காருக்குள்ளேயே அவர் சிக்கிக் கொண்டார்.
தகவல் கிடைத்து வந்துசேர்ந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கப் போராடிய போதும், அவரை காருக்குள்ளிலிருந்து மீட்க முடியாமல் போனது.
இதனால் அவ்வாடவர் காருக்குள்ளேயே உடல் கருகி மாண்டார்.
அச்சம்பவம் 1987-ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக, வட ஜோகூர் பாரு போலீஸ் கூறியது.