
கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – மலேசிய இந்திய சமூக பரிவுமிக்க சங்கத்தின் ஏற்பாட்டில் ஸ்டார் சிங்கர் சீசன்ஸ் 5 ஆவது இறுதிப் போட்டி ஆகஸ்டு 23 ஆம் தேதி கோலாலம்பூர் விஸ்மா துன் சம்பந்தனிலுள்ள ஆடிட்டோரியம் டான்ஸ்ரீ சோமாவில் மாலை 3 மணியளவில் நடைபெறவிருக்கிறது.
5 ஆவது ஆண்டாக தமிழ் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக நடைபெறும் இப்போட்டியில் கலந்துகொண்ட 200 பேரில் இறுதிச் சுற்றுக்கு 28 பேர் தேர்வுபெற்றுள்ளனர். இப்போட்டியில் முதல் முதல் இடத்தை பெறும் வெற்றியாளருக்கு 3,000 ரிங்கிட்டும், இரண்டாவது இடத்தை பெறுபவருக்கு 2,000 ரிங்கிட்டும் , 3ஆவது இடத்தை பெறுபவருக்கு ஆயிரம் ரிங்கிட்டும் பரிசாக வழங்கப்படும் என மலேசிய இந்திய சமூக பரிவுமிக்க சங்கத்தின் தலைவர் ஏ.கே குமார் அம்மாசி கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் கூட்டத்தில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் J.B மாறன் , கலைஞர் கலைமாமணி டாக்டர் ஸ்ரீ சண்முகநாதன், கலைஞர் மலேசிய ரஜினி வாசு ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த பாடல் போட்டியை காணவிரும்பும் ரசிகர்கள் 20 ரிங்கிட் விலையில் அதற்கான நுழைவு டிக்கெட்டுகளை வாங்கலாம். இது தொடர்பான மேல் விவரங்களுக்கு 016 7508413 என்ற எண்களில் குமார் அம்மாசியுடன் தொடர்பு கொள்ளலாம்.