
ஜோர்ஜ் டவுன், அக்டோபர் 10
ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரிடம்
கொள்ளையிட்ட குற்றச்சாட்டை மறுசுழற்சிக்கான உலோகப் பொருட்களை தேடும் ஆடவன் ஒருவன் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டான். நீதிபதி ஜூரைடா அபாஸ்
( Juraidah Abas ) முன்னிலையில் குற்றச்சாட்டை மொழிபெயர்ப்பாளர் வாசித்தபோது அதனை 43 வயதுடைய அந்த ஆடவன் மறுக்கவில்லை.
செப்டம்பர் 30 ஆம தேதி காலை மணி 6.15 அளவில் Lorong Aboo Sitee யிலுள்ள Grand Vega Creative இடத்திற்கு முன் 26 வயதுடைய Sheyia Rodriguez Navaroo என்ற பெண்மணிக்கு சொந்தமான கைப்பையை கொள்ளையடித்ததாக குற்றவியல் சட்டத்தின் 392 ஆவது விதியின் கீழ் அவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
14 ஆண்டுவரை சிறை , அபராதம் மற்றும் அல்லது பிரம்படி விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 392 ஆவது விதியின் கீழ் இந்த குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட நபர் வழக்கறிஞரை ஒருவரை நியமிக்கும் வகையில் இந்த வழக்கு விசாரணை நவம்பர் 12 ஆம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.