கோலாலம்பூர், செப்டம்பர் 27 – ஸ்ரீ பெட்டாலிங் LRT நிலையத்திற்கு அருகில் BMW i8 வாகனம் தீப்பிடித்து, முற்றாகச் சேதமானது.
இந்நிலையில், தீயைக் கட்டுப்படுத்துவதற்கு புக்கிட் ஜாலில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஆறு வீரர்கள் விரைந்துள்ளனர்.
அந்த வாகனத்தின் ஓட்டுநர் காயங்களின்றி உயிர் தப்பியதாகவும், தீ முழுமையாக அணைக்கப்பட்டதையும் தீயணைப்புத் துறை கூறியது.
இதில் அந்த BMW i8 ரக வாகனம் முற்றாகச் சேதமானது.
இந்த தீ விபத்திற்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாகவும் அத்துறை தெரிவித்திருக்கிறது.