Latestமலேசியா

ஸ்ரீ ஹர்த்தாமாஸில் குடிநுழைவு அதிகாரிகள் சோதனை; 31 வெளிநாட்டு பெண்கள் உட்பட 42 பேர் கைது

கோலாலம்பூர், அக் 2 – கோலாலம்பூரில் ஸ்ரீ ஹர்த்தாமாஸில் உள்ள
மதுபான விடுதியில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் நேற்றிரவு மேற்கொண்ட Ops Gegar சோதனை நடவடிக்கையில் வாடிக்கையாளர் உபசரிப்பு பணியாளர்களாக பணியாற்றிய 31 வெளிநாட்டுப் பெண்கள் உட்பட 42 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னிரவு 12 மணிக்கு மேல் மேற்கொள்ளப்பட்ட இந்த நடிவடிக்கையின்போது 39 வெளிநாட்டினருடன் உள்நாட்டைச் சேர்ந்த மூவரும் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறையின் இயக்குநர் வான் முகமட் சவ்பி ( Wan Mohammed Saupee ) கூறினார்.

இவர்களில் பெரும்பாலான வெளிநாட்டு பெண்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வருகை பாஸ்களை தவறாக பயன்படுத்தியுள்ளனர்.

வீட்டு வேலைக்கான பாஸ்களை பெற்ற அவர்கள் இரவு விடுதிகளில் GRO எனப்படும் வாடிக்கையாளர் உபசரிப்பு பணியாளர்களாக வேலை செய்துள்ளனர்.

62 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் மூன்று உள்நாட்டு ஆடவர்கள் உட்பட கைதானவர்களில் 22 தாய்லாந்து பெண்கள், 9 வியாட்னாம் பெண்களும் அடங்குவர்.

அந்த மதுபான விடுதியில் வேலை செய்துவந்த வங்காளதேசத்தைச் சேர்ந்த 9 ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர் .

பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகார்கள் மற்றும் வேவு தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!