Latestமலேசியா

ஹஜ் பெருநாள் ஜூன் 6-ஆம் தேதி கொண்டாடப்படலாம்

கோலாலம்பூர், மே-26 – பெரும்பாலான முஸ்லீம் நாடுகளில் இவ்வாண்டு ஹஜ் பெருநாள் வரும் ஜூன் 6, வெள்ளிக்கிழமை கொண்டாடப்படலாம்.

அபு தாபியைத் தளமாகக் கொண்ட அனைத்துலக வானியல் மையம் அவ்வாறு கணித்துள்ளது.

ஹிஜ்ரா நாள்காட்டியின் கடைசி மாதமான Zulhijjah-வின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை, நாளை செவ்வாக்கிழமை, மே 27-ஆம் தேதி பார்க்கப்படுகிறது.

இந்த வானியல் கணக்கின் படி மே 28-ஆம் தேதி Zulhijjah மாதத்தின் முதல் நாளாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி பார்த்தால் ஹஜ் பெருநாள் பத்தாவது நாள் அதாவது ஜூன் 6-ல் வருமென அம்மையம் கூறியது.

நம் நாட்டில் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாள் கொண்டாட்டத் தேதிகளை, அரச முத்திரைக் காப்பாளர் முறைப்படி அறிவிப்பது வழக்கமாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!