Latestமலேசியா

ஹடி அவாங்குடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சுகாதார அமைச்சர் நீக்கினார்

கோலாலம்பூர், ஜூன் 19 – தேசிய இருதய சிகிச்சை மையமான ஐ.ஜே.என்னில் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹடி அவாங்குடன் நேற்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சுல்கிப்லி அகமட் நீக்கியுள்ளார். ஐ.ஜே.என்னில் ஹடி அவாங் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதைத் தொடர்ந்து அவரை சந்தித்த பின்னர் நேற்று தனது முகநூலில் அவருடனான புகைப்படத்தை டாக்டர் சுல்கிப்லி பதிவேற்றியிருந்தார்.

ஆனால் அவரது வருகை தனியுரிமையை மதிக்கவில்லை என்பதோடு மருத்துமனை வருகைக்கான நிர்ணயிக்கப்பட்ட சீரான நடைமுறையை மீறியிருப்பதாக ஹடி அவாங் குடும்பத்தினர் கூறியதைத் தொடர்ந்து அந்த புகைப்படத்தை சுல்கிப்லி நீக்கியிருப்பதாக நம்பப்படுகிறது.

முன்னதாக, அப்துல் ஹாடியின் மகனும், திரெங்கானு Batu Buruk சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் முஹம்மது கலீல் அப்துல் ஹாடி,
( Muhammad Khalil Abdul Hadi) டாக்டர் சுல்கிப்லியின் செயல்களுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

அப்துல் ஹாடியின் புகைப்படத்தை குடும்பத்தினரின் அனுமதியின்றி, சுகாதார அமைச்சரின் அதிகாரப்பூர்வ முகநூலில் பொதுமக்கள் பார்வைக்காக பதிவேற்றியது பொருத்தமற்றது மற்றும் நெறிமுறையற்றது என்று அவர் தெரிவித்திருந்தாக கூறப்படுகிறது. தொழில் நிபுணத்துவமற்ற அணுகுமுறை மிகவும் வருந்தத்தக்கது என்று அவர் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!