
கோலாலம்பூர், ஜூன் 18 – பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹடி அவாங் ( Abdul Hadi Awang ) நேற்று IJN னில் இருதய அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். இதனை பாஸ் கட்சியின் துணைத்தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் ( Tuan Ibrahim Tuan Man ) உறுதிப்படுத்தினார்.
வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையாக மலேசியாவிலும் மருத்துவ நிபுணர்களும் வசதிகளும் இருக்கின்றன என்பதை நிருபிக்கும் வகையில் பாஸ் தலைவருக்கு மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமாக இருதய அறுவை சிகிச்சை அமைந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த அறுவை சிகிச்சை குறித்து தாம் உட்பட கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு ஐ.ஜே.என் நிபுணர்கள் விளக்கம் அளித்ததன் மூலம் அவர்களின் முழு கடப்பாட்டையும் உணர முடிந்ததாக துவான் இப்ராஹிம் தெரிவித்தார்.
இதற்காக ஐ.ஜே.என் இருதய மருத்துவ நிபுணர்களுக்கு கட்சியின் சார்பில் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.