
கோலாலம்பூர், செப் 24 – Hamas நடவடிக்கை மையமாக மலேசியா செயல்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் (Datuk Seri Mohd Khalid Ismail) மறுத்தார்.
அமலாக்க நிறுவனங்கள் மற்றும் அண்டை நாடுகளின் ஒத்துழைப்போடு நாட்டின் பாதுகாப்பு எப்போதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு மலேசியர்கன் ஆதரவு அவர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது என்பதை முகமட் காலிட் (Mohd Khalid) ஒப்புக்கொண்டார்.
அதே வேளையில் அந்த ஒருமைப்பாட்டு உணர்வு சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு பாதுகாப்பு நிறுவனங்கள் எப்போதும் விழிப்பாகவும் கவனமாகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு என்ற முறையில் பாலஸ்தீனர்களின் போராட்டத்தை மக்கள் ஆதரிக்கின்றனர்.
அதன் காரணமாகவே நாம் பாலஸ்தீனத்திற்கு தொடந்து ஆதரவை வழங்கி வருகிறோம்.
எனினும் பாலஸ்தீனர்களுக்கான மலேசியாவின் ஒருமைப்பாடு நோக்கம் சட்டத்திற்கு எதிராக பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதை பாதுகாப்பு நிறுவனங்களின் செயல்பாடு உறுதியாகவும் விழிப்பாகவும் இருப்பதாக இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றியபோது முகமட் காலிட் இஸ்மாயில் (Mohd Khalid Ismail) இதனை தெரிவித்தார்.