
கோலாலம்பூர், ஜூலை 7- ஹரப்பான் கூட்டணியுடனான ஒத்துழைப்பு எதிர்வரும் 16ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு வெற்றியை தேடித்தரும் என்பதோடு கடந்த பொதுத் தேர்தலில் வென்ற தொகுதிகளையும் தற்காத்துக்கொள்ள முடியும என நம்புவதாக தேசிய முன்னணியின் தலைவர் அகமட் ஸாஹிட் ( Ahmad Zahid ) தெரிவித்தார்.
Mahkota மற்றும் Ayer Kuning இடைத்தேர்தல்களின் முடிவுகளின் அடிப்படையில் இந்த கருத்தை கொண்டிருப்பதாக அவர் கூறினார். கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் Mahkota தொகுதியை 5,166 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற தேசிய முன்னணி இடைத் தேர்தலின்போது 20,648 வாக்குகள் பெரும்பான்மையில் அத்தொகுதியை தற்காத்துக் கொண்டது.
15ஆவது பொதுத் தேர்தலில் ஆயர் கூனிங் தொகுதியை 2,213 பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்ற தேசிய முன்னணி அதன் பிற்கு இடைத் தேர்தலில் அத்தொகுதியை 5,006 வாக்குகள் பெரும்பான்மையில் தற்காத்துக் கொண்டது.
ஹரப்பானுடனான ஒத்துழைப்பினால் தேசிய முன்னணிக்கான வாக்குகளும் அதிகரித்துள்ளது நிருபிக்கப்பட்டுள்ளதாக நேற்று கோப்பேங் அம்னோ பேராளர் கூட்டத்தை தொடக்கிவைத்து பேசியபோது அம்னோவின் தேசிய தலைவருமான ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
நாம் தனித்து போட்டியிடுவதால் தலைக்கனம் அல்லது பெருமையை கொண்டிருக்க முடியாது. கூட்டணியில் இணைந்து செயல்பட்டால் தேசிய அரசியல் அரங்கிலும் நாம் செல்லாக்குடனும் மற்றும் ஆதிக்கத்துடன் செயல்பட முடியும் என்றும் அவர் கூறினார்.