
கோலாலம்பூர், அக்டோபர் 9 –
ஹரிமாவு மலாயா தேசிய கால்பந்து அணியின் ஏழு வீரர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை, மலேசிய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே வழங்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடீன் நாசூதியோன் இஸ்மாயில் (Datuk Seri Saifuddin Nasution Ismail) தெரிவித்தார்.
மேலும், 1957ஆம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தின் படி, அந்த வீரர்களின் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் தங்கியிருக்கும் காலம், நற்பண்பு மற்றும் மலாய் மொழியில் போதிய அறிவு பெற்றிருத்தல் போன்ற கூறுகளை மதிப்பீடு செய்த பிறகே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாராளுமன்றத்தில், 2018 முதல் குடியுரிமை வழங்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை மற்றும் தகுதி அளவுகோல்கள் குறித்து அரசாங்கம் மற்றும் மலேசிய கால்பந்து சங்கம் (FAM) பயன்படுத்தும் முறைகள் பற்றியும் விளக்கம் எழுப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த குடியுரிமை வழங்கல் முழுமையாக சட்டத்தின் அடிப்படையில், வெளிப்படையாகவும் அரசியலமைப்பின் உண்மையான நிபந்தனைகளுக்குட்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சைஃபுடீன் பதிலளித்தார்.