
கோலாலம்பூர், மார்ச்-2 – ஹலால் முத்திரை தொடர்பில் மேலும் தெளிவும் வழிகாட்டுதலையும் பெறும் முயற்சியில், KK Super Mart நிறுவனம் HDC எனப்படும் ஹலால் மேம்பாட்டுக் கழகத்துடன் ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது.
தொடக்கக் கட்டமாக HDC ஏற்பாட்டிலான அடிப்படை ஹலால் தொழில்துறை பயிற்சியில், தனது 34 ஊழியர்கள அது பங்கேற்கச் செய்தது.
அவர்கள், விற்பனை, வாடிக்கையாளர் சேவை, வர்த்தகப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களாவர்.
KK கோபுரத்தில் நடைபெற்ற அந்த ஒரு நாள் பயிற்சியில், முஸ்லீம்களுக்கு எந்தளவுக்கு ஹலால் முக்கியம், உள்ளுர் மற்றும் அனைத்துலக அளவில் தொழில்துறைகளுக்கு ஏன் ஹலால் முக்கியம் என்பன குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
ஹலால் சான்றிதழுக்கு விண்ணப்பித்தல், மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான JAKIM-மின் பணி உள்ளிட்டவை பற்றியும் அதிகாரிகள் தெளிவுப்படுத்தினர்.
பணியாளர்கள் முஸ்லீமாக இருந்தாலும் முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் ஹலால் பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பது அவசியமாகும் என KK Super Mart கூறியது.
மலேசியா மட்டுமின்றி இந்தியா நேப்பாளம் ஆகிய நாடுகளையும் சேர்த்து 940 கிளைக் கடைகளைக் கொண்டுள்ள KK Super Mart இதே உத்வேகத்தில் உள்ளூர் மற்றும் அனைத்துலகச் சந்தைகளில் பீடுநடை போடும் என அதன் நிர்வாகம் நம்பிக்கைத் தெரிவித்தது.