
புத்ராஜெயா, டிசம்பர்-20 – ஹலால் சான்றிதழ் பெற்ற வணிக வளாகங்களில்
முஸ்லீம் அல்லாத பண்டிகை அலங்காரங்களுக்கு
எந்தத் தடையும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஹலால் தன்மையைப் பாதிக்கும் வகையில் மத வழிபாட்டு அம்சங்களை கொண்டிருக்காத வரை, கிறிஸ்மஸ் போன்ற பண்டிகை அலங்காரங்களை
வைக்க அனுமதி உண்டு என, இஸ்லாமிய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர்
டத்தோ Dr சுல்கிஃப்லி ஹசான் கூறினார்.
மலாக்கா மாநில இஸ்லாமிய சமயத் துறையான Jaim வெளியிட்ட சுற்றறிக்கை
பொது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில்,
அது தேசிய அளவிலான கொள்கை அல்ல என அமைச்சர் விளக்கினார்.
மலேசியா தொடர்ந்து
பன்முகத்தன்மையையும் சமூக ஒற்றுமையையும்
பாதுகாக்கும் என்றார் அவர்.
Jaim வெளியிட்ட உத்தரவை முன்னதாக மலாக்கா DAP கடுமையாகச் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.



