
ஹாங்காங் செப்டம்பர் 20 – ஹாங்காங் நகரின் குவாரி பே (Quarry Bay) பகுதியில் கட்டுமானப் பணிகளின் போது இரண்டாம் உலகப்போர் காலத்தைச் சேர்ந்த 450 கிலோ எடையுடைய குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த குண்டு இன்னும் செயல்படும் நிலையில் இருப்பதால் தவறாக கையாளப்பட்டால் பெரும் அளவில் உயிரிழப்புகளும் சேதங்களும் ஏற்பட கூடிய வாய்ப்பு அதிகமுள்ளது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் உள்ள 18 கட்டிடங்களில் வசிக்கும் சுமார் 6,000 பேர் வெளியேற்றப்பட்டதோடு அவர்களில் 2,800-க்கும் மேற்பட்டோர் நேரடியாக போலீசாரின் உதவியுடன் இடம்பெயர்ந்தனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலை வெளியேற்றும் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவு பெற்றதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.