Latestமலேசியா

ஹாலோவீன் கொண்டாட்டம் இருக்கட்டும், உள்ளூர் விழாக்களுக்கு முன்னுரிமை அளியுங்கள்; டத்தோ சிவகுமார் பரிந்துரை

கோலாலம்பூர், அக்டோபர்-8,

Tourism Malaysia, வரவிருக்கும் 2026 மலேசியாவுக்கு வருகைப் புரியும் ஆண்டு பிரச்சார இயக்கத்தை முன்னிட்டு, உள்ளூர் கலாச்சார விழாக்களை முன்னிறுத்தும் விளம்பர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

Sunway Lagoon-னில் நடைபெறும் “Nights of Fright 11” ஹாலோவீன் நிகழ்ச்சி குறித்த சமூக ஊடகப் பதிவு, பல்வேறு விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், Dinamik Sinar Kasih Malaysia சமூக நலச் சங்கத்தின் தலைவர் டத்தோ என். சிவகுமார் அவ்வாறு பரிந்துரைத்துள்ளார்.

ஹாலோவீன் போன்ற கொண்டாட்டங்கள் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவலாம் என்றாலும், மலேசியாவின் தனித்துவமிக்க பாரம்பரிய திருவிழாக்கள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதே முறையானது என அவர் வலியுறுத்தினார்.

சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சு விழாக்கள் மற்றும் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் SOP நடைமுறைகளை உருவாக்க வேண்டும் எனவும் சிவகுமார் பரிந்துரைத்தார்.

அதுவும், தீபாவளி போன்ற முக்கிய விழாக் காலங்களில், வணிக வளாகங்கள் மற்றும் அரசாங்கக் கட்டடங்களில் அந்தக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அலங்காரங்கள் வைக்கலாம்; இதன் மூலம் சுற்றுப் பயணிகளும் இளம் தலைமுறையும் மலேசியாவின் பன்முக கலாச்சாரத்தை அனுபவிக்க முடியும் என்றார் அவர்.

உள்ளூர் திருவிழாக்களை வலுப்படுத்துவதானது, மக்களின் ஒற்றுமை, கலாச்சாரப் பெருமை மற்றும் தேசிய அடையாளத்தை கட்டிக் காக்கும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!