
ஹுலு சிலாங்கூர், டிசம்பர் 4 – நேற்று ஹூலு சிலாங்கூரில், ‘delivery’ பணியாளரைத் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அந்த ஊழியர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து 54 வயதுடைய சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர் என்று ‘Hulu Selangor’ மாவட்ட போலீஸ் தலைவர் Ibrahim Husin தெரிவித்தார்.
புக்கிட் செந்தோசாவிலிருந்து கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் வேனை நிறுத்தி, அவர் தன்னை மோதி விபத்துக்குளாக்க முயற்சித்தார் என்று முதலில் குற்றம் சாட்டியுள்ளார்.
பின்னர் துப்பாக்கி போன்ற பொருளை எடுத்துக் காட்டி, அவரை மிரட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போலீசார் ‘Micro’ என எழுதப்பட்ட துப்பாக்கி, அதன் குண்டுகள் உட்பட மேலும் சில பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
பாதுகாப்பு காவலராக பணிபுரியும் அந்த நபருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.



