
கோலாலம்பூர், நவம்பர்-13,
கோலாலம்பூரில், ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஹெல்மெட் இல்லாமல் போக்குவரத்து போலீஸாரின் பக்கத்தில் சாலை சமிக்கை விளக்குப் பகுதியில் நிதானமாக நின்று, பச்சை விளக்கு மாறும் வரை காத்திருந்த வீடியோ TikTok-கில் வைரலாகியுள்ளது.
@abngnaim77 கணக்கில் பதிவேற்றப்பட்ட 23 வினாடி வீடியோவில்
ஹெல்மெட் இல்லாமல் நின்ற மோட்டார் சைக்கிளோட்டியை போலீஸார் கண்டும் கணாதது போல புறப்பட்டுச் சென்றனர்.
வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள் “Cool uncle”, “Invisible power”, “Steel nerves” என நகைச்சுவையாக கருத்துகள் பதிவிட்டுள்ளனர்.
வீடியோவுக்கு 61,000-க்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்த வேளை, இணையவாசிகளின் கருத்துகள் சிரிப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளன.
சட்டப்படி ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றாலும், இந்த ‘நிதானமான நாயகன்’ வலைத்தளவாசிகளின் மனதை கவர்ந்துள்ளார்.



