
தெஹ்ரான் , மார்ச் 27-ஹோர்முஸ் நீரிணையில் அனைத்துலக கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த, இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை ஒரு ” டோல் சாவடி ” போன்ற கட்டுப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. .
கப்பல்கள் இப்போது முழுமையான ஆவணங்களைச் சமர்ப்பித்து, அனுமதி குறியீட்டைப் பெற்று, ஈரானிய அதிகாரிகளின் பாதுகாப்புடன் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பாதை வழியாகச் செல்ல வேண்டும் என dpa செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டிய லாயிட்ஸ் லிஸ்ட்டின் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
மார்ச் 13ஆம்தேதி முதல் , தென் ஈரானில், லராக் தீவுக்கு அருகிலுள்ள அந்தப் பாதை வழியாகக் குறைந்தது 26 கப்பல்கள் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



