Latestசினிமா

1.4 பில்லியன் அமெரிக்க டாலர் செல்வத்துடன் பில்லியனர் பட்டியலில் இணைந்தார் ஷாருக் கான்

மும்பை, அக்டோபர் 2 – பிரபல பாலிவுட் நடிகர் 59 வயதான ‘பாட்ஷா’ ஷாருக் கான் இப்போது அதிகாரப்பூர்வமாக பில்லியனர் பட்டியலில் இணைந்துள்ளார்.

திரைப்படத் துறையில் 33 ஆண்டுகள் கழித்து, அவரின் மொத்த சொத்து மதிப்பு தற்போது 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாய் 12,490 கோடி என ஹுரூன் இந்தியா ரிச் லிஸ்ட் 2025 (Hurun India Rich List 2025) அறிக்கையில் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிகச் செல்வந்த நடிகராக பல ஆண்டுகளாக இருப்பதுடன், உலகளாவிய தரவரிசையிலும் ஷாருக்கான் முன்னேறியுள்ளார்.

அவரது பண மதிப்பு தற்போது சர்வதேச செல்வந்தர்களையும் விட அதிகமாக உள்ளது.

இந்திய திரைப்பட நடிகர்களில் ஷாருக்கானுக்கு அடுத்த நிலையில் ஜூஹி சாவ்லா (Juhi Chawla) மற்றும் ஹிருதிக் ரோஷன் (Hrithik Roshan) மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!