
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-26- பினாங்கு அரசு, மாநில மக்கள் சொந்த வீடுகளைக் கொண்டிருப்பதை உறுதிச் செய்யும் விதமாக, வெறும் பத்தே ரிங்கிட் முன்பணத்தில் வீட்டுடைமைத் திட்டத்தை அறிவித்துள்ளது.
பினாங்குத் தீவிலும் செபராங் பிறையிலும் இத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக, வீடமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் துறைகளுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜூ தெரிவித்தார்.
1 திட்டம் தீவிலும் இன்னொன்று செபராங் பிறையிலும் உள்ளன.
தீவில் 2 வகையான வீடுகள் கட்டப்படுகின்றன; 1,000 சதுர அடி வீடுகள் 330,000 ரிங்கிட் விலையிலும், 850 சதுர வீடுகள் 280,000 ரிங்கிட் விலையிலும் விற்கப்படும்.
அதே சமயம், செபராங் பிறை, கம்போங் ஜாவாவிலும் 2 வகையான வீடுகள் கட்டப்படும்.
Jiran Residensi எனும் குடியிருப்புகள் 1,000 சதுர அடியில் 280,000 ரிங்கிட் விலையில் விற்கப்படும்.
அதுவே 850 சதுர அடி வீடுகள் 230,000 ரிங்கிட் விலையில் விற்கப்படும் என்றார் அவர்.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இவ்வீடுகள் 10 விழுக்காடு தள்ளுபடியில் வழங்கப்படுகின்றன.
அதற்கான பதிவு வரும் மே 4- ஆம் தேதி பட்டவொர்த், டத்தோ ஹஜி அஹ்மாட் படாவி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, 2025 பாகான் டாலாம் சுகாதார மற்றும் சமூக நல விழாவின் போது நடைபெறும்.
அதன் போது, 90% வங்கிக் கடனை வாங்க தகுதிப் பெற்றவர்கள் வெறும் 10 ரிங்கிட் முன்பணத்தில் வீடுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
முதலில் வரும் 300 பேருக்கு மட்டுமே வாய்ப்பு என்பதால், அன்றைய தினம் காலை 8 மணிக்கெல்லாம் வந்து வரிசையில் நின்றுவிடுமாறு டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ கேட்டுக் கொண்டார்.