Latestமலேசியா

100 ஆண்டுகள் பழமையான துவாலாங் மரம் குவா முசாங் சாலை திட்டத்திற்காக அகற்றம்

குவா மூசாங், பிப்ரவரி-6-கிளந்தான், குவா மூசாங் – குவாலா கிராய் பாதையின் முக்கிய அடையாளமாக இருந்த 100 ஆண்டுகள் பழமையான துவாலாங் மரம், Central Spine சாலை திட்டத்திற்காக நேற்று வெட்டப்பட்டது.

வனத்துறை அனுமதியுடன், 40-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சுமார் 3 மணி நேரத்தில் அந்நடவடிக்கையை மேற்கொண்டனர்.

60 மீட்டர் உயரம் கொண்ட இந்த மரம், Sungai Bayu கிராமத்தின் அடையாளமாக கருதப்பட்டது.

இந்நிலையில் கிராம மக்கள் மரம் அகற்றப்பட்டதில் வருத்தம் அடைந்தாலும், வளர்ச்சிக்காக அதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

உணர்ச்சிகரமான தருணமாக இருந்தாலும், முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக அதை ஏற்றுக்கொண்டதாக உள்ளூர் தலைவர்களும் தெரிவித்தனர்.

இந்த Central Spine சாலை திட்டம் கிளந்தான் மற்றும் பஹாங்கை இணைக்கும் போக்குவரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!