
கோலாலம்பூர், அக் 25 – 100 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய
அனைத்து இ.பி.எப் உறுப்பினர்களும் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் கோரப்படாத தங்களது சேமிப்பு தொகையை மீட்பதற்கான கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 100 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள உறுப்பினர்கள் இன்னும் தங்கள் ஓய்வூதிய சேமிப்பை முழுமையாக மீட்டுக்கொள்ளவில்லையென ஒரு அறிக்கை மூலம் இ.பி.எப் அறிவித்துள்ளது.
உறுப்பினர்கள் அல்லது அவர்களது வாரிசுதாரர்கள் உறுப்பினர்களின் அடையாள ஆவண எண் அல்லது EPF உறுப்பினர் எண்ணைப் பயன்படுத்தி, உரிமை கோரப்படாத மீதமுள்ள சேமிப்பை சரிபார்க்கலாம். மேலும் இ.பி.எப் உறுப்பினர்களும் அவர்களது வாரிசுதாரர்களும் 2025ஆம் ஆண்டு மார்ச் 31ஆம்தேதிக்குள் இ.பி.எப் சேமிப்பிற்கான உரிமைக்கோரலை சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் தேதிக்குப் பிறகு, உரிமை கோரப்படாத சேமிப்புகள்
(BWTD) எனப்படும் மலேசிய தலைமைக் கணக்காயர் துறையின் கீழ் உள்ள உரிமை கோரப்படாத பண மேலாண்மைப் பிரிவுக்கு மாற்றப்படும்.