Latestஉலகம்மலேசியா

102 வயதிலும் சாதனை தொடர்கிறது: மலேசியாவின் பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் ரோபர்ட் குவோக்

கோலாலம்பூர், மார்ச்-11-பிரபல தொழில் அதிபரான தான் ஸ்ரீ ரோபர்ட் குவோக், தனது 102-ஆவது வயதில் மீண்டும் மலேசியாவின் மிகப்பெரிய பணக்காரராக முதலிடம் பிடித்துள்ளார்.

Forbes சஞ்சிகை வெளியிட்டுள்ள வருடாந்திர உலகப் பணக்காரர்கள் பட்டியலில், குவோக் தற்போது 204-ஆவது இடத்தை வகிக்கிறார்.

கடந்தாண்டு 12.1 பில்லியன் டாலராக இருந்த அவரது செல்வம் இவ்வாண்டு 14.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே பல ஆண்டுகளாக நாட்டின் முதல் நிலை கோடீஸ்வரராக வலம் வருபவர் ரோபர்ட் குவோக்.

அவரின் Kuok குழுமம் செம்பனை எண்ணெய், கப்பல் போக்குவரத்து, சொத்து மற்றும் ஹோட்டல் தொழில்துறை என
பல துறைகளில் கோலோச்சுகிறது.

அவருடைய நிறுவனங்களில் மிகப் பிரபலமானது Shangri-La Hotels and Resorts ஆகும்.

இவ்வேளையில், ரோபர்ட் குவோக்கைத் தவிர்த்து Hong Leong வங்கியின் Quek Leng Chan, 99 Speed Mart Holdings நிறுவனர் Lee Thiam Wah, Syed Mokthar Albukhary உள்ளிட்ட இதர 14 மலேசியர்களும் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!