
காபூல், செப்டம்பர் 5 – நேற்று ஆப்கானிஸ்தானில் மீண்டும் 6.2 ரிக்டர் அளவிலான மூன்றாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கத்தில் 2,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் 6,700க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து, பல்லாயிரக்கணக்கானோர் வீடில்லாமல் தவிக்கின்றனர் என்றும் அறியப்படுகின்றது.
இந்நிலையில் அப்பகுதி மக்களுக்கு உணவு, மருத்துவப் பொருட்கள், தங்குமிடம் போன்றவை உடனடியாகத் தேவைப்படுவதாக உள்ளூர் அரசு கூறியுள்ளது.
மேலும் 84,000 பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் இச்சகம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பல கிராமங்கள் முற்றிலும் அழிந்து, மக்கள் வெளிநிலையில் தங்கியுள்ளனர் என்றும் ஆப்கானிஸ்தானின் கடுமையான வறுமை, மோசமான காலநிலை மற்றும் சர்வதேச உதவியின் பற்றாக்குறை, மீட்பு பணிகளை மேலும் சிக்கலாக்கி வருவதாக தகவல்கள் அறியப்படுகிறது.