
கோலாலம்பூர், அக் 7 –
இந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் LRT Kelanja Jaya 2 ஆவது
வழிதடத்தில்) தடங்கல் ஏற்படுவதை பயணர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்த தடங்கல் அக்டோபர் 11ஆம் தேதி முதல் நவம்பர் 22 ஆம்தேதிவரை தேர்ந்தெடுக்கப்பட்ட தேதிகளில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை ஏற்படும். இதனால் அந்த வழித்தடத்தில் உள்ள சில நிலையங்கள் பாதிக்கப்படும்.
எனவே பயணிகளின் பயணத்தை எளிதாக்க, இந்த நேரங்களில் இலவச பேருந்து மற்றும் வேன் Shuttles சேவை வழங்கப்படும்.
👉 உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு கூடுதல் பயண நேரத்திற்கு தயார்படுத்திக் கொள்ளும்படி Rapid K.L வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.