
பூச்சோங், டிசம்பர் 23-நீண்ட காலமாக நிலச் பிரச்னையில் சிக்கியிருந்த சிலாங்கூர், பூச்சோங் பிரிமா ஸ்ரீ மகா சக்தி தேவி ஆலயத்திற்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது.
நூறாண்டு கால பழைமை வாய்ந்த அக்கோவிலுக்கு 10,000 அடியில் சிலாங்கூர் அரசு நிலம் ஒதுக்கியுள்ளது.
சர்ச்சைக்குள்ளான நிலம், மேம்பாட்டாளருக்கு அவசரமாகத் தேவைப்படுவதால், வரும் வெள்ளிக்கிழமை டிசம்பர் 26-ஆம் தேதி கோயில் அருகிலுள்ள புதிய இடத்திற்கு தற்காலிகமாக மாறுகிறது.
பின்னர், அனைவரின் ஒத்துழைப்போடு புதிய இடத்தில் கோவில் கட்டப்படும் என, ம.இ.கா முன்னாள் உதவித் தலைவரும் பூச்சோங் வாழ் குடியிருப்பாளருமான டத்தோ T. மோகன் கூறினார்.
இந்த கோயில் இடமாற்றத்தை சாத்தியமாக்கிய சிலாங்கூர் அரசாங்கம் உள்ளிட்ட தரப்புகளுக்கும், மோகன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இவ்வேளையில், சுமார் 10 ஆண்டு போராட்டம் முடிவுக்கு வந்துள்ள குறித்து மகிழ்ச்சித் தெரிவித்த ஆலயத் தலைவர் மகேஸ்வரன், பூச்சோங் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, டத்தோ T. மோகன் ஆகியோருக்கு நன்றித் தெரிவித்தார்.
இந்த தற்காலிக இடமாற்றத்தை ஒட்டி வெள்ளிக் கிழமை 12 மணிக்கு பூஜை நடைபெறுவதால், சுற்று வட்டார மக்கள் வந்து கலந்துகொள்ளுமாறு, MB விஜய் அழைப்பு விடுத்தார்.
அன்னதானம் வழங்க டி மோகன் முன்வந்திருப்பதாகவும் விஜய் சொன்னார்.
கோவில் நிலப் பிரச்னைக்காக இதுநாள் வரை போராடிய அனைத்து இளைஞர்களுக்கும் நிர்வாகத்தினர் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.



