
புதுடில்லி, ஏப் 16 – 12 க்கும் மேற்பட்ட பெண் நாய்களை கற்பழித்த சந்தேகத்தின் பேரில் புதுடில்லி Kailash Nagar பகுதியிலுள்ள ஆடவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர்.
பிராணிகள் தொடர்பான அரசு சார்பற்ற இயக்கத்திற்கு பொருட்களை விநியோகிக்கும் வேலை செய்துவரும் அந்த சந்தேகப் பேர்வழிக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டான்.
ஒரு நாய்க்கு எதிராக அந்த ஆடவன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டிருக்கும் காட்சியை கொண்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியானதை தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டதாக டில்லி போலீசார் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
அந்த காணொளியில் Naushad என்று கூறப்படும் அந்த சந்தேகப் பேர்வழியை சில தனிப்பட்ட நபர்கள் தாக்குவதையும் பார்க்க முடிந்தது. குறைந்தது 12 முதல் 13 பெண் நாய்களை Naushad கற்பழித்திருப்பதாக அரசு சார்பற்ற இயக்கத்தை சேர்ந்த தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும் இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்காக அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்