
சுங்கைப் பட்டாணி , அக் 1 –
12 வயது சிறுவனுக்கு இலவசமாக சைக்கிள் கொடுத்து அவனை ஓரின புனர்ச்சி செய்ததாக நம்பப்படும் 46 வயது ஆடவன் கைது செய்யப்பட்டான் . சுங்கைப் பட்டாணி புக்கிட் பிந்தாங் ரம்லி பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட சிறுவன் இதர மூவருடன் இருந்தபோது திங்கட்கிழமை இரவு மணி 9 அளவில் இந்த சம்பவம் நடந்ததாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் ( Hanyan Ramlan ) தெரிவித்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் அவ்விடத்திற்கு வந்த அந்த ஆடவன் அங்கிருந்த சிறுவர்களில் ஒருவனை அனுகி இலவசமாக சைக்கிள் வழங்குவதாக கூறியதோடு Bukit Bintang Ramli யில் Taman Sri Astana வுக்கு வரும்படி கூறியுள்ளான். அந்த ஆடவனுடன் பின்தொடர்ந்து சென்ற சிறுவனுக்கு அந்த நபர் சைக்கிளை கொடுத்துள்ளான்.
அதன்பிறகு மீண்டும் மற்றொரு சைக்கிள் இருப்பதாகவும் அதனையும் கொடுப்பதாக கூறி அந்த நபர் அச்சிறுவனை அழைத்துச் சென்று கட்டாயமாக அவனை ஓரினப் புனர்ச்சியில் ஈடுபடுத்தியுளளான்.
சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றம் தொடர்பான 2017ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 14 ( b) விதியின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Hanyan Ramlan கூறினார்.